
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில், திவே-அஞ்சூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை-3-ன் (நாசிக் நெடுஞ்சாலை) குறுக்கே, மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கான முதல் எஃகு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
100 மீட்டர் நீளமும் 1,405 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இந்தப் பாலம், நெடுஞ்சாலைப் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இரவு நேரப் போக்குவரத்துத் தடையின் போது நிறுவப்பட்டது.
அதிவேக ரயில் உள்கட்டமைப்பிற்கான சிக்கலான எஃகு கட்டமைப்புகளைத் தயாரித்தல், கொண்டு செல்லுதல் மற்றும் நிறுவுதல் ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறனை இத்திட்டம் வெளிப்படுத்துவதாக ‘நேஷனல் ஹை-ஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்’ தெரிவித்துள்ளது.
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்திற்காகத் திட்டமிடப்பட்ட 28 எஃகு பாலங்களில், இதுவரை 16 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
