Tuesday, September 29பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இந்திய வம்சாவளி சதுரங்க மேதை போதனா சிவானந்தன் மிக இளம் வயது பெண் கிராண்ட்மாஸ்டர்!

இந்திய வம்சாவளி சதுரங்க மேதை போதனா சிவானந்தன், மிக இளம் வயது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆகி வரலாறு படைத்துள்ளார். இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வயதான இவர், உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நேற்று நிறைவடைந்த 46வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார். போதனா அனைத்து 11 சுற்றுகளிலும் விளையாடி, எட்டு புள்ளிகளுடன் போட்டியை நிறைவு செய்தார்.

அவரது இந்த செயல்பாடு, அவருக்கு இரண்டாவது சர்வதேச மாஸ்டர் (IM) தகுதியையும் பெற்றுத் தந்துள்ளது. இது அவரை ஒரு சர்வதேச மாஸ்டர் ஆவதற்கு மேலும் ஒரு படி நெருக்கமாகக் கொண்டு செல்கிறது. போதனா முதன்முதலில் கோவிட்-19 ஊரடங்கின் போது சதுரங்கத்தைக் தொடங்கினார், அதன் பின்னர் பல சாதனைகளை முறியடித்துள்ளார். கடந்த மாதம், 2026 பிரிட்டிஷ் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், பிரிட்டனின் மிக இளம் வயது மகளிர் சதுரங்க சாம்பியன் ஆனார். லண்டனைச் சேர்ந்த இந்தப் பள்ளி மாணவி, தொடர்ந்து விளையாடி இந்த விளையாட்டில் வரலாறு படைக்க விரும்புவதாகக் கூறுகிறார்.