Friday, April 3பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் கூட்டிய கூட்டத்தில் விக்ரம் மிஸ்ரி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் கூட்டிய கூட்டத்தில், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். இக்கூட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.

இக்கூட்டத்தின்போது, ​​சர்வதேச நீர்வழிகள் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குரிய சுதந்திரம் மற்றும் தடையற்ற போக்குவரத்து ஆகிய கொள்கைகளின் முக்கியத்துவத்தை வெளியுறவுச் செயலாளர் சுட்டிக்காட்டியதாக வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியானது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும், வளைகுடாப் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தனது மாலுமிகளை இழந்த ஒரே நாடு இந்தியாதான் என்பதையும் அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழிமுறையாக, பதற்றத்தைத் தணிப்பதும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் இடையிலான இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை எனும் பாதைக்குத் திரும்புவதும் அமைந்திருப்பதாக அவர் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்.