
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 48-வது ‘வேர்ல்ட் ஸ்கில்ஸ்’ போட்டியில் இந்தியா 10-வது இடத்தைப் பிடித்தது. இப்போட்டியில் இந்தியா ஆறு வெள்ளிப் பதக்கங்களையும், 20 ‘சிறப்புத் திறனுக்கான பதக்கங்களையும்’ (Medals for Excellence) வென்றது.
இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுத் தெரிவித்த திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, உலகளாவிய திறன் மேம்பாட்டுப் பயணத்தில் இந்திய அணியின் இந்தச் சிறப்பான செயல்பாடு ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டார். முந்தைய சாதனைகளை முறியடித்து, நாட்டின் இளம் போட்டியாளர்கள் இந்தியாவின் திறன்மிக்க ஆற்றலின் வளர்ந்து வரும் வலிமையையும் போட்டித்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார்.
‘வேர்ல்ட் ஸ்கில்ஸ்’ என்பது உலகின் முன்னணி சர்வதேசத் திறன் போட்டியாகும்; இது பல்வேறு தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறன்களில் சிறந்து விளங்குவதை வெளிப்படுத்த, பங்கேற்கும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த இளம் நிபுணர்களை ஒன்றிணைக்கிறது.
