Monday, October 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்.

பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டு தலமான ஹீட்டன் பார்க் ஜெப ஆலயத்தில் ஏற்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீசார் கூறியதாவது: கத்தியால் குத்தப்பட்ட பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்; குற்றவாளியை பின்னர் அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்பாக இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை, மான்செஸ்டரில் வழிபாட்டின் போது நடந்த இந்த கொடூரமான தாக்குதலைக் கண்டிக்கின்றோம் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, இந்த துயர தருணத்தில் இந்தியா ஆதரவாக நிற்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். . அவர் மேலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட உலகம் ஒன்றிணைந்தால் மட்டுமே இதனை வெல்ல முடியும் என்று தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரும் மான்செஸ்டர் தாக்குதலைக் கடுமையாக கண்டித்து, நாட்டில் உள்ள ஜெப ஆலயங்கள் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூடுதல் போலீஸ் படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் தாக்குதல் மீண்டும் ஒருமுறை பள்ளி, ஆலயம், சமூக கூடங்கள் போன்ற சுய பாதுகாப்பற்ற இடங்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்களின் மீதான அச்சத்தை உணர்த்தியுள்ளது. அரசாங்கங்கள், அன்றாட மக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றிணைந்து சமூக பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதன் மீது சர்வதேச அளவில் அழுத்தம் பெருகியுள்ளது.