Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

கூகுளின் 2025க்கான அனிமேஷன் கவுண்டவுன் டூடுல்!

2024ம் ஆண்டு இன்று நிறைவடையத் தயாராக இருப்பதை ஒட்டி, கூகுள் நிறுவனம் ஒரு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. கூகுள்: “இன்றைய டூடுலைப் போலவே – வாய்ப்புகளுடன் பிரகாசிக்கும் புதிய ஆண்டு இதோ! கவுண்டவுன் தொடங்கட்டும்.” கூகுள் டூடுலில், இருண்ட வானத்தை பின்னணியாகக் கொண்டு, தடிமனான எழுத்துகளில் ‘கூகுள்’ என்பதைக் காட்சிப்படுத்தி, குறிப்பாக ‘ஓ’ என்ற எழுத்து ஒரு கடிகாரமாக மாறி நள்ளிரவு 12 மணியை குறிக்கிறது.

2025ம் ஆண்டை சந்தோஷத்துடன் அணுகுவோம். பொன் புதுயுகம் குழு நமது வாசகர்களுக்கும், வாசிப்பாளர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

வாழ்க பாரதம்! வளர்க தமிழ்!