Wednesday, April 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஸ்பெயினை தொடர்ந்து பிரான்சும் இத்தாலியும் அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுக்கின்றன.

ஈரானில் ஒரு மாத காலமாக நடந்து வரும் போரில் ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நட்பு நாடுகள் உதவிகரமாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த நிலையில், சில அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை பிரான்சும் இத்தாலியும் எதிர்த்துள்ளதாக செவ்வாயன்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களின் ஆதரவின்மைக்காக நீண்டகால நேட்டோ கூட்டாளிகளை டிரம்ப் “கோழைகள்” என்று அழைத்தார். செவ்வாயன்று, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உதவாத நாடுகளை அவர் கடுமையாகச் சாடினார்.

பிரான்ஸ் மறுப்பு:
இஸ்ரேலுக்கு இராணுவப் பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் தங்கள் வான்பரப்பில் பறப்பதை பிரான்ஸ் தடுத்ததாக டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், பிரான்ஸ் “மிகவும் உதவிகரமாக இல்லை” என்று எழுதியிருந்தார்.

இந்தப் பதிவைக் கண்டு பிரெஞ்சு அதிபர் அலுவலகம், மோதல் தொடங்கியதிலிருந்து பிரான்சின் கொள்கைக்கு ஏற்பவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறியது. ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா பிரான்சின் வான்பரப்பைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படவுள்ள அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு செல்ல, இஸ்ரேல் பிரான்ஸின் வான்வெளியைப் பயன்படுத்த விரும்பியதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இத்தாலியும் அனுமதி மறுப்பு:
மத்திய கிழக்கு நோக்கிச் செல்வதற்கு முன்னதாக, சிசிலியில் உள்ள சிகோனெல்லா (Sigonella) விமானத் தளத்தில் தரையிறங்க அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு இத்தாலி அனுமதி மறுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்ந செய்தியை முதன்முதலில் வெளியிட்ட ‘கொரியர் டெல்லா செரா’ (Corriere della Sera) நாளிதழின்படி, “சில அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்” மத்திய கிழக்கு நோக்கிப் பறப்பதற்கு முன்னதாக, கிழக்கு சிசிலியில் அமைந்துள்ள அந்தத் தளத்தில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தன.

ஜெர்மனியின் நிலைப்பாடு:
அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகிய அனைத்தும் நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளாகும்; ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அமெரிக்கத் தளமான ‘ராம்ஸ்டைன்’ (Ramstein) அமைந்துள்ள ஜெர்மனியும் ஒரு நேட்டோ உறுப்பு நாடாகும். போரின் ஆரம்பகட்டத்தில், அமெரிக்கா இத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று ஜெர்மனி தெரிவித்திருந்தது; எனினும், இப்போர் சட்டவிரோதமானது என்று தாம் கருதுவதாக அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டைன்மியர் கூறியதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் விவாதத்திற்குள்ளானது.