Tuesday, July 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

சைபர் போர்: 1.5 மில்லியனுக்கும் அதிகமான சைபர் தாக்குதல்கள், இந்தியா முறியடித்தது!

இந்திய வலைத்தளங்களை குறிவைத்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான சைபர் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியதாய் மகாராஷ்டிரா சைபர் குற்றத் துறை தெரிவித்துள்ளது. ஏழு மேம்பட்ட தொடர்ச்சியான அச்சுறுத்தல் (APT) குழுக்களை அடையாளம் கண்டுள்ளது.

இருப்பினும் இந்த 1.5 மில்லியன் தாக்குதல்களில் ஒரு சதவீதம் கூட அவர்கள் வெற்றி பெறவில்லை என்பதைக் சுட்டிக் காட்டியிருக்கிறது.

பாகிஸ்தானுடன் இணைந்த ஹேக்கிங் குழுக்களால் தொடங்கப்பட்ட சைபர் போரை விவரிக்கும் “சிந்தூர் சாலை” என்ற அறிக்கையை இந்திய ஆயுதப்படைகள் வெளியிட்டன. இந்த அறிக்கை காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் மாநில புலனாய்வுத் துறை உட்பட அனைத்து முக்கிய சட்ட அமலாக்க நிறுவனங்களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

“இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியாவின் அரசாங்க வலைத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் குறைந்துவிட்டன, ஆனால் முழுமையாக நின்று விடவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, மொராக்கோ மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தத் தாக்குதல்கள் தொடர்கின்றன,” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

DDoS தாக்குதல்கள், மற்றும் வலைத்தளத்தை சிதைத்தல் ஆகியவை இந்த சைபர் தாக்குதல்களில் அடங்கும். பல தாக்குதல்கள் தடுக்கப்பட்டாலும், சில இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்ததாக கூடுதல் காவல்துறை இயக்குநர் யஷஸ்வி யாதவ் தெரிவித்தார்.

இருப்பினும், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் தரவை ஹேக்கர்கள் திருடி தேர்தல் ஆணைய வலைத்தளத்தை குறிவைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மகாராஷ்டிரா சைபரின் மூத்த அதிகாரி மறுத்துள்ளார். தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன, மேலும் இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்பு காப்பாற்றப்பட்டது.

மேலும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல்கள் தொடர்பான 5,000 க்கும் மேற்பட்ட தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை மகாராஷ்டிரா சைபர் துறை அடையாளம் கண்டு, அதை நீக்கியுள்ளது.