
வருண் சக்ரவர்த்தியின் அபாரமான ஐந்து விக்கெட்டுகளால் (42க்கு 5) துபாயில் நடந்த போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் குரூப் ஏ-வில் முதலிடத்தைப் பிடித்தது.
நாளை, மார்ச் 4 ஆம் தேதி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா அரையிறுதியில் விளையாடும்.
250 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னதாக, இந்திய அணிக்காக ஷ்ரேயாஸ் ஐயர் 98 பந்துகளில் 79 ரன்களும், ஹார்டிக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் முறையே 45 மற்றும் 42 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா இதே வேகத்தில் அரையிறுயில் ஆஸ்திரேலியாவை வெல்லுமா?