Monday, September 28பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

நாடு தழுவிய மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

இன்று தொடங்கவிருந்த நாடு தழுவிய மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) உறுதிப்படுத்தியது.

இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) எட்டப்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. வேலைநிறுத்தம் தொடர்பான விவகாரங்கள் குறித்து இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) ஆகியவற்றிற்கு இடையே நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக AIBEA தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.