Monday, January 5பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

வெனிசுலா அதிபரை அமெரிக்கா கைது செய்ததால் இந்தியாவுக்கு வரும் பிரச்சினை!

வெனிசுலாவை தாக்கி அதன் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் நாடு புகுந்து கைது செய்துள்ளது. இனி வெனிசுலாவை அமெரிக்கா ஆண்டு வழிநடத்தும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் உற்பத்தியை வெனிசுலா மேற்கொண்டு வருவதோடு நம் நாட்டுக்கும் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் நம் நாட்டுக்கு பெரும் பிரச்சினை வர உள்ளது.

உலகிலேயே அதிகளவில் கச்சா எண்ணெயை வெனிசுலா தான் உற்பத்தி செய்கிறது. சவுதி அரேபியாவை விட இங்கு தான் அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் வர்த்தகம் தான் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை குறிவைத்து தான் வரி போட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா வெனிசுலாவின எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்து வருகிறது. இதனால் இந்தியாவும், சீனாவும் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தடைகளால் 2020ம் ஆண்டு வரை வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து இருந்தது.அதன்பிறகு எழுச்சி கண்டது. வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 2021ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 5.5 லட்சம் முதல் 6.3 லட்சம் பேரல்கள் என்ற அளவில் இருந்தது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி முறையே 217 மில்லியன் மற்றும் 264 மில்லியன் பேரல்களாக அதிகரித்தது 2024 ஆம் ஆண்டில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 315 மில்லியன் பேரல்களை எட்டியது. அதாவது ஒரு நாளைக்கு சுமார் 8.5 லட்சம் பேரல்கள் ஆகும். 2025 ஆம் ஆண்டில் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 1.14 மில்லியன் பேரல்களாக வெனிசுலா உயர்த்தியது.

வெனிசுலா நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது. நம் நாட்டை ஒப்பிடும்போது சீனாவுக்கு தான் அதிகளவில் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் செல்லுகிறது. இதனால் தற்போதைய விவகாரம் இந்தியா, சீனா இரண்டு நாடுகளையும் பாதிக்கலாம். நம் நாட்டை எடுத்து கொண்டால் வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் வெனிசுலாவில் கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளவில் நம் நாடு கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து கொண்டது. அதன்படி 2021-22 நிதியாண்டில் வெனிசுலாவில் இருந்து நம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 89 மில்லியன் டாலராக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக அதிகரித்தது. 2022-23 நிதியாண்டில் 250 மில்லியன் டாலராகவும் இருந்தது. 2023-24 ஆம் ஆண்டில் இந்தியா-வெனிசுலா கச்சா எண்ணெய் வர்த்தகம் மீண்டும் புத்துயிர் பெற்றது. வெனிசுலாவிடம் இருந்து நம் நாடு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது.

2024 ஆம் ஆண்டில் வெனிசுலாவிடம் இருந்து நம் நாட்டின் சராசரி எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு 63,000 முதல் 100,000 பேரல்கள் வரை அதிகரித்தது. இது முந்தைய ஆண்டை விட 500% அதிகமாகும். கடந்த ஆண்டும் இதே நிலை நீடித்தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று டிரம்ப் அழுத்தியதால் நம் நாடு வெனிசுலாவிடம் வாங்கியது.

ரஷ்யாவை ஒப்பிடும்போது வெனிசுலாவிடம் நாம் குறைவாக தான் வாங்குகிறோம். ஆனாலும் நம் நாட்டுக்கு தற்போது வெனிசுலாவின் கச்சா எண்ணெயும் முக்கியம். அமெரிக்காவின் செயல்களால் நம் நாட்டில் கச்சா எண்ணெய் வர்த்கத்தில் பெரிய அளவில் பாதிப்பை தரும். அதோடு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.