Monday, October 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான், இந்திய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு!

அக்டோபர் 10, 2025 அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடனான இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.

தாலிபான்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட பிறகு, ஆகஸ்ட் 2021 இல் இந்தியா ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகங்களை மூடியது. இந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் வருகை மற்றும் சந்திப்பின் மூலம், தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அங்கீகரிப்பதாக கருதப்படுகிறது, மற்றும் இந்தியா அதிகாரப்பூர்வமாக உறவுகளை மீட்டெடுக்கிறது.

அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெற்ற பிறகு, 2021 இல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான முதல் உயர்மட்ட இராஜதந்திர ஈடுபாடு இந்த சந்திப்பாக இருப்பதால், முத்தாகியின் இந்திய வருகையை உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

“காபூலில் உள்ள தூதரகத்தை மீண்டும் திறக்கும் இந்தியா, தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானுடனான முழு இராஜதந்திர உறவுகளையும் மீட்டெடுத்தது. புது தில்லியில் இன்று முத்தகியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வருகை நமது உறவுகளை முன்னேற்றுவதிலும், நீடித்த இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்பை உறுதிப்படுத்துவதிலும் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி, நமது இருதரப்பு வர்த்தகம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம், மக்களிடையேயான உறவுகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான இந்தியாவின் ஆதரவு குறித்து விவாதிக்கப்பட்டது.” என்று தனது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்.