Wednesday, February 5பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

மகா கும்பமேளாவுக்கு 3 சிறப்பு ரயில்கள், தெற்கு ரயில்வே அறிக்கை!

மகா கும்பமேளா முன்னிட்டு சென்னை-லக்னோ உட்பட மூன்று சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி – கயா:
கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 6 மற்றும் 20 தேதிகளில் இரவு 8:30 மணிக்கு புறப்படும் ரயில், பீகார் மாநிலம் கயாவில், நான்காவது நாள் அதிகாலை 1:30 மணிக்கு சென்று அடையும்.
மறுமார்க்கமாக, கயாவில் இருந்து ஜனவரி 9 மற்றும் 23 தேதிகளில் இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு, நான்காவது நாள் அதிகாலை 3:50 மணிக்கு கன்னியாகுமரிக்கு திரும்பும்.

கன்னியாகுமரி – பனாரஸ்:
பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில், மூன்றாவது நாள் இரவு 9:50 மணிக்கு உத்தரப் பிரதேச மாநிலம் பனாரசுக்கு சென்று அடையும்.
மறுமார்க்கமாக, பனாரசில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதி மாலை 6:05 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் இரவு 9:00 மணிக்கு கன்னியாகுமரிக்கு திரும்பும். இந்த ரயில் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், மற்றும் சென்னை எழும்பூர் வழியாகச் செல்கிறது.

சென்னை சென்ட்ரல் – மோமதி:
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 8, 15, 22, பிப்ரவரி 5, 19, மற்றும் 26 தேதிகளில் மதியம் 2:20 மணிக்கு புறப்படும் ரயில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகிலுள்ள மோமதி நகரை மூன்றாவது நாள் மதியம் 2:15 மணிக்கு அடையும்.
மறுமார்க்கமாக, மோமதி நகரில் இருந்து ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 8, 22, மற்றும் மார்ச் 1 தேதிகளில் அதிகாலை 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:55 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு திரும்பும்.

டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கியுள்ளது.