திங்கள்கிழமை (டிசம்பர் 16) பாலஸ்தீனியர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், “பாலஸ்தீனம்” என்று பொறிக்கப்பட்ட பையை நாடாளுமன்றத்திற்குள் ஏந்திச் சென்றார் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி. காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பி, பாலஸ்தீனியர்களுடன் தனது ஆதரவை காட்டி வருகிறார் எம்பி பிரியங்கா காந்தி.
“பாலஸ்தீனம்” என்ற வாசகமும், தர்பூசணி பொறிக்கப்பட்ட பாலஸ்தீனிய சின்னங்களும் அடங்கிய கைப்பையை காந்தி கையில் வைத்திருந்தார். பாலஸ்தீன ஒற்றுமையின் அடையாளமாக தர்பூசணி பார்க்கப்படுகிறது.