![](https://puduyugam.com/wp-content/uploads/2024/12/thissanayake-and-modiji.webp)
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்ற பின்னர் முதலாவது சர்வதேச பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை திங்கட்கிழமை டெல்லியில் சந்தித்தார்.
புதுடெல்லியில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இலங்கை அதிபர் திசாநாயக்க கூறியதாவது: “எங்கள் நிலத்தை எந்த வகையிலும் இந்தியாவின் நலனுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய பிரதமரிடம் உறுதி அளித்துள்ளேன்”.
புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திஸாநாயக்க, “இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக மேலோங்கி செழிக்கும், இந்தியாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என்றார்.