இது ஒரு “பயங்கரமான சோகம்” – இந்தியா. கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்காக இந்தியா அழைப்பு விடுத்துள்ளது! மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா கோரியுள்ளது.
“கடந்த வாரத்தில், மூன்று இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கனடாவில் எங்கள் நாட்டினரை தாக்கிய இந்த பயங்கரமான சோகங்களால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்,” என்று ஜெய்ஸ்வால் தனது ஊடக சந்திப்பில் கூறினார். மேலும் “அதிகாரப்பூர்வ கணக்கின்படி, 400,000 இந்திய மாணவர்கள் கனடாவில் படிக்கின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் கனேடிய அதிகாரிகளுடன் தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டே தான் இருக்கின்றோம். வன்முறைகள் அதிகரித்து வருவதால், கனடாவில் மோசமான பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, நமது நாட்டினர் மற்றும் இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் அறிவுரையையும் வழங்கியுள்ளோம்.” என்று அவர் கூறினார்.