Wednesday, February 5பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

திருவண்ணாமலை மண்ணில் மாட்டிய 7 பேரின் போராட்டம்.. மீட்புக்கு துரிதமாக செயல்படும் படையினர்!

திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளனர். அவர்களை மீட்க, பேரிடர் மீட்புக் குழுவினருடன் 100க்கும் மேற்பட்டோர் இடைவிடாது மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையை (தீபமலை) சுற்றி கடந்த 40 ஆண்டுகளாக 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன, இதில் 20,000க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

நேற்று மாலை 4.45 மணியளவில், திருவண்ணாமலை வ.உ.சி நகர், 11வது தெருவின் அருகே மண் சரிவு திடீரென ஏற்பட்டது. பெரிய சத்தத்துடன் பாறை சரிந்து, மண் மூழ்கியதால் 3 வீடுகள் பாதிக்கப்பட்டன. இதில், ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் மூழ்கியதாக தெரிய வருகிறது.

சம்பவத்தின் போது, அந்த வீடில் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களின் இரு பிள்ளைகள் மற்றும் அருகிலுள்ள வீடுகளின் மூன்று குழந்தைகள் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மற்ற 2 வீடுகளில் வசித்தவர்கள் மண்ணில் புதையாமல் தப்பியிருந்தாலும், ராஜ்குமாரின் குடும்பத்தினரின் நிலை பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை. 35 டன் எடைகொண்ட பாறை சுமார் 20 அடி சரிந்து வீடுகளை மூடியதால், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.