Thursday, October 15பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு, வத்தலக்குண்டில் உறவினர்கள் உற்சாகம்!

Navaneetham Pillai with her relatives in Batlagundu, Tamil Nadu – 2007

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் வசிக்கும் அவரது உறவினர்கள் கொண்டாடி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு 2026ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது அவரது உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டிஷ் கால ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் இருந்து தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்ற குடும்பங்களில் ஒன்று தான் நவநீதம் பிள்ளையின் குடும்பம். முப்பாட்டன் தலைமுறையில் ஒருவருக்கு நோபல் பரிசை கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ள பழைய வத்தலக்குண்டு பகுதியில் வசிக்கும் அவரது உறவினர்கள், சமுதாய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

2007ம் ஆண்டு பழைய வத்தலக்குண்டு பகுதிக்கு வருகை தந்த நவநீதம் பிள்ளையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது உறவினர்கள் பகிர்ந்து கொண்டும் வருகின்றனர். இதேபோல் கேக் வெட்டி கொண்டாடிய அவரது சமுதாய மக்கள் நவநீதம் பிள்ளை இம்மண்ணிற்கு பெருமை சேர்த்திருப்பதாக தெரிவித்தனர்.