
தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் 85.99 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 80.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இரு தொகுதிகளிலும் காலை முதலே வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாக்காளர்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டது.
தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என முக்கிய அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளதால், இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி நிலவுகிறது. அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இதே போல் புதுச்சேரி தட்டாஞ்சாவடியிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அங்கு மாலை 7.30 மணியளவில் 80.81% வாக்குகள் பதிவாகியிருந்தது.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொழிஞ்சிவாடி பகுதியில் வாக்குச்சாவடி மையத்துக்குள் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க பிரசாரம் செய்ததாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தேர்தல் பணியாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
