Tuesday, August 11பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இந்திய அரசு: e-visa வைத்திருப்பவர்களுக்கு மேலும் 11 சர்வதேச துறைமுகங்கள்!

மின்னணு விசா (e-visa) வைத்துள்ள வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைவதை அனுமதிக்கும் வகையில், மேலும் 11 சர்வதேச நுழைவுப் புள்ளிகளை (ports) அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் 9 தரைவழி நுழைவுப் புள்ளிகளும் 2 விமான நிலையங்களும் அடங்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் போபால் மற்றும் திருப்பதி விமான நிலையங்களும், அட்டாரி மற்றும் அகர்தலா தரைவழி நுழைவுப் புள்ளிகளும் அடங்கும்.

இந்த நுழைவுப் புள்ளிகளின் சேர்க்கையானது மின்னணு விசாவின் பயன்பாட்டையும் அதன் மீதான ஈர்ப்பையும் மேலும் அதிகரிப்பதாக அமைச்சகம் கூறியது. சுமார் 95 சதவீத மின்னணு விசா விண்ணப்பங்களை இந்தியா 72 மணி நேரத்திற்குள் பரிசீலித்து முடிப்பதாகவும் அது குறிப்பிட்டது. இந்தச் சேர்க்கையுடன், மின்னணு விசா வைத்துள்ள வெளிநாட்டினர் நுழைவதை அனுமதிக்கும் சர்வதேச நுழைவுப் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 88-ஆக உயர்ந்துள்ளது; இதில் 37 விமான நிலையங்கள், 38 துறைமுகங்கள் மற்றும் 13 தரைவழி நுழைவுப் புள்ளிகள் அடங்கும்.