Thursday, July 30பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிகள்!

கனடாவின் ஒன்ராறியோவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. 5-வது இடத்தைப் பிடித்திருந்த இந்திய ஆண்கள் அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 11-வது இடத்திலிருந்த குவைத் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

தொடக்க ஆட்டத்தில் யுஷா நஃபீஸ், அப்துல்லா அலியிடம் நேர் செட்களில் தோல்வியடைந்தார்; ஆனால் ஆர்யவீர் திவான், கலீத் வலீத் அல் ஃபௌசைனை 11-5, 11-6, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தி ஆட்டத்தை சமன் செய்தார். பின்னர் குர்வீர் சிங், அப்துல் ரஹ்மான் அல் சானியாவை 11-3, 11-3, 11-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். காலிறுதியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியப் பெண்கள் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று குழுச் சுற்றை நிறைவு செய்தது. ருத்ரா சிங், மக்காயலா நாயுடுவை 11-4, 11-5, 11-3 என்ற கணக்கிலும், அனஹத் சிங், பிரியானா ராபின்சனை 11-1, 11-1, 11-3 என்ற கணக்கிலும் எளிதாக வீழ்த்தினர். சான்வி கலங்கி, விவியன் வான் டெர் ஸ்கிஃப்பை 11-4, 11-3, 11-3 என்ற கணக்கில் வீழ்த்தி அணியின் முழுமையான வெற்றியை உறுதி செய்தார். காலிறுதியில் இந்தியப் பெண்கள் அணி அமெரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.