Friday, July 24பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

26 நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சோனம் வாங்சுக்.

சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக், 26 நாட்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை நிறைவு செய்ததாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “இதற்கு முன்பு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு என்னிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல்வேறு நிபந்தனைகள் தொடர்பாக நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் நாட்டில் வன்முறை ஏற்படக்கூடிய சூழ்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

அத்துடன், “இந்த நிபந்தனைகள் குறித்து விரைவில் தனி வீடியோ மூலம் விரிவாக விளக்குகிறேன். எந்த இடத்திலும் வன்முறை சம்பவங்கள் நடைபெற அனுமதிக்காமல், அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனவும் சோனம் வாங்சுக் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.