Wednesday, July 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பொள்ளாச்சி நீர்வளத்துறையில் விதிமீறல்: 22 டெண்டர்களை தமிழக அரசு ரத்து செய்தது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பொருட்கள் கொள்முதல், சேவை வழங்கல் அல்லது கட்டுமானப் பணிகளுக்காக, தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களும் போட்டியிடும் வகையில் வெளிப்படையாக அறிவிக்கும் ஏல முறையே திறந்த டெண்டர் ஆகும்.

ஆனால், பொதுவான திறந்த டெண்டருக்கு பதிலாக, முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட அல்லது தகுதி பெற்ற சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கும் வரையறுக்கப்பட்ட (லிமிடெட்) டெண்டர் முறையில் பொள்ளாச்சி நீர்வளப்பிரிவில் பணிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், டெண்டர் தொடர்பான சான்றிதழ்களைப் பெற ஒப்பந்ததாரர்கள் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், அந்த வழிகாட்டுதல்களை மீறி, ஒப்பந்ததாரர்கள் நேரில் வர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அறப்போர் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பொள்ளாச்சி நீர்வளத்துறையால் வெளியிடப்பட்ட 22 டெண்டர்களை தமிழக நீர்வளத்துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட டெண்டர்களில், பரம்பிக்குளம்–ஆழியாறு வட்டார நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளும் இடம்பெற்றுள்ளன.