Monday, August 24பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாட்டில் அமோனியா கசிவு சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட அமோனியா கசிவு காரணமாக ஐந்து பெண்கள் உயிரிழந்தது மற்றும் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) இச்சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்குமாறும் மாநில அரசுக்கு அது உத்தரவிட்டுள்ளது.