Friday, April 10பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வருடாந்திர சூரிய ஆற்றல் திறன் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது!

2025-26 நிதியாண்டில், இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 45 ஜிகாவாட் வருடாந்திர சூரிய ஆற்றல் திறன் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. சமூக ஊடகப் பதிவு ஒன்றில், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, இந்தச் சாதனை எரிசக்திப் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் ‘விக்ஷித் பாரத்’ (ஆற்றல்மிக்க இந்தியா) என்ற தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இந்த அசாதாரண வளர்ச்சிக்கு வழிவகுத்து, தூய்மையான, பசுமையான மற்றும் தன்னிறைவு பெற்ற எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் மாற்றத்திற்கு உந்துசக்தியாக விளங்குகின்றன என்று திரு. ஜோஷி கூறினார். மார்ச் 2026-ல் நாடு 6.65 ஜிகாவாட் சூரிய ஆற்றல் திறனைப் பதிவு செய்துள்ளது என்றும், இது ஒரே மாதத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச சூரிய ஆற்றல் நிறுவல் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தூய்மையான மற்றும் ஆற்றல் பாதுகாப்பு மிக்க எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு உந்துசக்தியாக, ராஜஸ்தான், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிக பங்களிப்பு செய்த மாநிலங்களாக உருவெடுத்துள்ளன என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம், நூற்றுப் பதினைந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஈவுத்தொகைக் காசோலையை இன்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.