
உலகளவில் மக்களின் வாழ்க்கையைப் பாதித்து, வளர்ச்சியை மந்தப்படுத்திய கோவிட் பெருந்தொற்றுடன் தற்போதைய சூழ்நிலையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஒப்பிட்டார். சக்திவாய்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஒன்றியத்தின் மாநாட்டுப் பிரதிநிதிகளிடையே அவர் உரையாற்றினார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் தூண்டப்பட்ட மோதல் தீவிரமடைந்திருப்பது, பலதரப்பட்ட தொழில்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், மேலும் என்னென்ன விளைவுகள் ஏற்படக்கூடும் என்று சொல்ல முடியாது என்றும் ரஷ்ய ஜனாதிபதி கூறினார். இந்த ஆயுத மோதல் தற்போதைய சூழ்நிலையை மேலும் மேலும் பாதித்து வருவதாகவும், சர்வதேச தளவாடங்கள், உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
