
யுஎஃப்பியு (UFBU) அமைப்பின் கீழ் நாடு தழுவிய 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 5 நாள் வங்கிச் சேவை என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே இந்த வேலைநிறுத்தம் என்று வேலைநிறுத்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் யுஎஃப்பியு அமைப்பு 5 நாள் வேலை வாரத்தை கோரி வருகிறது. வேலைநிறுத்தக் காலம் 2026 ஜனவரி 26 நள்ளிரவு முதல் 2026 ஜனவரி 27 நள்ளிரவு வரை (24 மணி நேரம்). வங்கித் துறையில் 5 நாள் வேலை வாரத்திற்கு அரசாங்க ஒப்புதல் அளிப்பது மற்றும் மீதமுள்ள சனிக்கிழமைகளை வங்கி விடுமுறை நாட்களாக அறிவிப்பது (இந்திய வங்கிகள் சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டது) இந்த வேலைநிறுத்தத்திற்கு முக்கிய கோரிக்கை ஆகும்.
ஜனவரி 22 மற்றும் 23, 2026 ஆகிய தேதிகளில் DFS/நிதி அமைச்சகம், IBA மற்றும் UFBU ஆகியவற்றுடன் சமரசக் கூட்டங்கள் நடைபெற்றன. வாரம் 5 நாள் வேலை கோரிக்கைக்கு உறுதியான காலக்கெடுவோ அல்லது வாக்குறுதியோ அளிக்கப்படவில்லை; இதனால் வேலைநிறுத்த அழைப்பு தொடர்கிறது என்று UFMU அறிவித்துள்ளது.
