Tuesday, December 23பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க, லட்சியம் நிறைந்த மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement – FTA) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் இன்று இதை அறிவித்தனர். பிரதமர் மோடி இன்று திரு. லக்ஸனுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. ஒன்பது மாதங்கள் என்ற சாதனை நேரத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்திருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட லட்சியத்தையும் அரசியல் உறுதியையும் பிரதிபலிக்கிறது என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இருதரப்புப் பொருளாதார ஈடுபாட்டை கணிசமாக ஆழப்படுத்தும், சந்தை அணுகலை மேம்படுத்தும், முதலீட்டை ஊக்குவிக்கும், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான செயல்திட்டங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

இது இரு நாடுகளின் கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் வழங்கப்படும் வலுவான மற்றும் நம்பகமான அடித்தளத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதிலும், அடுத்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்திலிருந்து இந்தியாவில் 20 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெறுவதிலும் இரு பிரதமர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

விளையாட்டு, கல்வி மற்றும் மக்கள்-மக்களுக்கு இடையேயான உறவுகள் போன்ற இருதரப்பு ஒத்துழைப்பின் பிற துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களையும் தலைவர்கள் வரவேற்றனர். மேலும், இந்தியா-நியூசிலாந்து கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வரும் ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதற்கு வழிவகுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஒரு சமூக ஊடகப் பதிவில், இந்தியா-நியூசிலாந்து கூட்டாண்மை புதிய உயரங்களை எட்டப் போகிறது என்று திரு. மோடி கூறினார். பல்வேறு துறைகளில் நியூசிலாந்திலிருந்து 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை இந்தியா வரவேற்பதாக அவர் கூறினார்.

இந்தியாவின் திறமையான இளைஞர்கள், துடிப்பான ஸ்டார்ட்அப் சூழல் மற்றும் சீர்திருத்தத்தால் உந்தப்பட்ட பொருளாதாரம் ஆகியவை கண்டுபிடிப்பு, வளர்ச்சி மற்றும் நீண்ட கால கூட்டாண்மைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன என்று பிரதமர் கூறினார். விளையாட்டு, கல்வி மற்றும் கலாச்சாரம் போன்ற பிற துறைகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார்.