Sunday, January 25பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

டெல்லி-ஆக்ரா விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் (டிசம்பர் 16) மத்துராவில் டெல்லி-ஆக்ரா விரைவுச்சாலையில் ஏற்பட்ட கடும் பனிமூட்டத்தால் நிகழ்ந்த ஒரு பெரும் சாலை விபத்தில், பல வாகனங்கள் தீப்பிடித்ததில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்தது. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட திகிலூட்டும் காணொளியில், வாகனங்கள் தீப்பிடித்து எரிவதை காணமுடிகிறது. அந்தக் காணொளியைப் பதிவு செய்த நபர், இந்தச் சம்பவத்தில் குறைந்தது நான்கு பேருந்துகள் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.

விபத்து குறித்து விவரித்த ஒரு நேரில் கண்ட சாட்சி, “கிட்டத்தட்ட 3-4 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன. விபத்து நடந்தபோது நான் தூங்கிக்கொண்டிருந்தேன். பேருந்து முழுவதுமாக நிரம்பியிருந்தது. எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தன. விபத்து அதிகாலை 4 மணியளவில் நடந்தது,” என்று கூறினார்.

சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே பல தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீசார் விரைந்தனர். மீட்பு பணிகள் நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அதிகாலை பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.