Saturday, November 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் இன்று மோடி புறப்பட்டார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவிற்கு மூன்று நாள் பயணமாக புறப்படுகிறார். ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜோகன்னஸ்பர்க்கிற்கு வருகிறார்.

2016 ஆம் ஆண்டு இருதரப்பு பயணத்திற்கும் பின்னர் 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இரண்டு பிரிக்ஸ் உச்சிமாநாடுகளுக்கும் சென்றதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவிற்கு அவர் மேற்கொண்ட நான்காவது அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். இந்த ஆண்டு கூட்டம், உலகளாவிய தெற்கில் நடத்தப்படும் நான்காவது தொடர்ச்சியான ஜி20 உச்சி மாநாடாகும்.

மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார். அவர் உலக நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இந்தியா-பிரேசில்-தென் ஆப்ரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இன்று (நவ.,21) காலை டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வேன். ஆப்ரிக்காவில் நடைபெறுவதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு. பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். உச்சிமாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.