
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திரா பள்ளத்தாக்கின் மாட்ரே தாரா கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை தனது சொந்த மக்கள் மீது குண்டுவீசி தாக்கிய ஒரு நாளுக்குப் பிறகு இந்தியாவின் இந்த கண்டனம் வந்துள்ளது. கைபர் பக்துன்க்வாவில் “தங்கள் சொந்த மக்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்காக” செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது.
“இந்தியாவிற்கு எதிரான ஆதாரமற்ற மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளுடன் இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலை தொடர்ந்து பாகிஸ்தான் துஷ்பிரயோகம் செய்கிறது” என்று ஜெனீவாவில் உள்ள இந்திய நிரந்தர மிஷனின் ஆலோசகரான தியாகி கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி, நேற்று பாகிஸ்தான், துன்புறுத்தல், மனித உரிமை மீறல்கள் மற்றும் இந்திய பிரதேசத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது, தங்கள் சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு நடத்தியது போன்றவற்றை அம்பலப்படுத்தினார்.
கைபர் பக்துன்க்வா என்பது பாகிஸ்தானில் உள்ள ஒரு தொலைதூர மற்றும் மலைப்பிரதேசமாகும், இது பயங்கரவாதிகளின் மறைவிடங்களால் நிறைந்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் கட்டுப்பாட்டை நிலைநாட்ட முயற்சிக்கும் ஒரு முக்கிய போர்க்களம் இது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திரா பள்ளத்தாக்கின் மாட்ரே தாரா கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை தனது சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் விமானப்படை சீனாவில் தயாரிக்கப்பட்ட J-17 போர் விமானங்களைப் பயன்படுத்தி எட்டு சீன தயாரிப்பு LS-6 குண்டுகளை – லேசர் வழிகாட்டப்பட்ட துல்லிய வெடிமருந்துகளை – அதிகாலை 2 மணியளவில் ஒரு கிராமத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீசியது என்றும் தெரிவித்துள்ளார் தியாகி.
