Tuesday, December 2பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இந்தியாவின் திவ்யா மகளிர் உலகக் கோப்பையை வென்று கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் பெற்றார்.

இந்தியாவின் திவ்யா தேஷ்முக், கோனேரு ஹம்பியை (இவரும் இந்தியாவை சேர்ந்தவர்) 1.5-0.5 என்ற கணக்கில் தோற்கடித்து 2025 FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்றார். பத்தொன்பது வயதான திவ்யாவுக்கு 44 லட்ச ருபாய் பரிசும், கிராண்ட்மாஸ்டர் பட்டமும் வழங்கப்பட்டது.

இறுதி ஆட்டத்தில் கிளாசிக்கல் பகுதியில் இரண்டு டிராக்களுக்குப் பிறகு, விரைவான டை பிரேக்கர்களுக்குச் சென்றது (இரண்டு 15+10 ஆட்டங்கள்). இரண்டாவது ஆட்டத்தில் திவ்யா கருப்புக் காய்களுடன் வென்றபோது போட்டி நிறைவு பெற்றது.

இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியாவின் கோனேரு ஹம்பிக்கு 30 லட்ச ருபாய் பரிசு வழங்கப்பட்டது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் 2026 FIDE மகளிர் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள், இது பெண்கள் உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான அடுத்த போட்டியாளரைத் தீர்மானிக்கும். தகுதி பெற்ற மூன்று வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக், கோனேரு ஹம்பி மற்றும் சீனாவை சேர்ந்த ஜிஎம் டான் ஜோங்கி ஆவர்.