Wednesday, November 26பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியது: இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து

இந்தியா-அமெரிக்கா இடையிலான முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படும் போர் ட்ரோன் வாங்கும் ஒப்பந்தம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ட்ரோன்கள் வந்தடையும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சமீபத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு துறையின் கவனம், உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை வாங்கும் பக்கம் திருப்பப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்திய விமானப்படையுக்காக அமெரிக்காவில் இருந்து போர் ட்ரோன்கள் வாங்கும் நடவடிக்கையை, பாதுகாப்பு அமைச்சகம் அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் முன்னெடுத்து வருகிறது. இந்த ட்ரோன்கள் நீண்ட தூரம் வரை பறந்து, மிக உயர்ந்த துல்லியத்துடன் இலக்குகளை தாக்கும் திறனுடையவை.

இந்திய விமானப்படையுடன் நடைபெறும் ஆரம்ப கட்ட ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-ஆம் ஆண்டு உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்திய “ஷீல்ட் ஆலின் விபேட்” போர் ட்ரோன்கள், ஜிபிஎஸ் இல்லாத மற்றும் நெட்வொர்க்-ஜாமிங் செய்யப்பட்ட வான்வெளி சூழல்களிலும் சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. இந்தியா வாங்கும் ட்ரோன்களும் இதே போல் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடியவை என குறிப்பிடப்படுகிறது.

இந்த ட்ரோன்கள், இந்தியாவில் தற்போதுள்ள உள்நாட்டு ட்ரோன்களை விட மேம்பட்டவை என்றும், எதிர்காலப் போர்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.