மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்த தினேஷ்-ஜெயந்தி தம்பதியரின் மகன்களான ரோஹித் மற்றும் ஸ்ரீஜித், பள்ளியில் படித்து வரும் இவர்கள் 13.01.2025 அன்று ரோட்டில் கீழே கிடந்த பர்ஸை கண்டெடுத்தனர். தங்கள் வசம் வைத்துக் கொள்ளாமல் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று ஒப்படைத்தனர்.
மதுரை கூடல் புதூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள், இந்த சகோதரர்களின் நேர்மையை வெகுவாக பாராட்டி பரிசும் அளித்தார்.