விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்து, போராட்டம் நடத்தும் விவசாயிகளின் உண்மையான கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசு எந்த அறிக்கையும் வெளியிடாதது குறித்து கேள்வி எழுப்பியது. உண்ணாவிரதத்தை கைவிட நீதிமன்றம் அழுத்தம் கொடுக்கிறது என்ற தோற்றத்தை பஞ்சாப் அரசு ஊடகங்களில் வேண்டுமென்றே உருவாக்குகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நவம்பர் 26 முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிக் தலேவால், மருத்துவ உதவி பெற மறுத்துவிட்டார். “உங்கள் மாநில அரசு அதிகாரிகள் உண்ணாவிரதத்தை துறக்க நீதிமன்றம் அவருக்கு அழுத்தம் கொடுக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த ஊடகங்களில் திட்டமிட்ட முயற்சி உள்ளது. அவரது உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அமைதியான போராட்டத்தை தொடரலாம் என்றுதான் நாங்கள் கூறினோம்.” என்று நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் பெஞ்ச் பஞ்சாப் அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங்கிடம் கூறினார்.
நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேள்வி எழுப்பியது. “மிஸ்டர் மேத்தா, நீங்கள் இத்தனை நாட்களாக இருந்தீர்கள், உங்கள் தரப்பில் ஏன் விவசாயிகளின் உண்மையான குறைகளை கருத்தில் கொள்வோம் என்றும் ஒரு அறிக்கையை வெளியிட முடியவில்லை. ஏன் மத்திய அரசால் கூட முடியாது? அறிக்கை விடுவீர்களா?” என்று நீதிபதி புயான் கேள்வி எழுப்பினார். “சமரசம் கூடாது என்பது உங்கள் அணுகுமுறை. அதுதான் முழுப் பிரச்சினை” என்று நீதிபதி காந்த் மேலும் கூறினார்.