Wednesday, February 5பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

சட்டவிரோத விசா முறைகேடு: Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம்! அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

Infosys நிறுவனம், சட்டவிரோதமாக தனது ஊழியர்களுக்கு விசாக்கள் வழங்கிய விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர், நிறுவனர் நாராயணமூர்த்தி ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்து வெளியிட்டதால் கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது இந்த விசா விவகாரம் வேகமெடுத்துள்ளது.

அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதற்காக Infosys நிறுவனம் ரூ.238 கோடி அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது, அமெரிக்காவில் இந்திய நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் ஒன்றாகும். Infosys, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். 22 நாடுகளில் கிளைகள் கொண்ட இந்நிறுவனத்தில் 1.4 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

விசா முறைகேடு விவரம்:
அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக H-1B தொழில்விசா பெற வேண்டிய இடத்தில், Infosys, B-1 பார்வையாளர் விசாக்களை தவறாக பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விசா முறைகேட்டின் மூலம் ஊதியம் மற்றும் தொழிலாளர் நலத்திட்ட செலவுகளை தவிர்க்க முயன்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். H-1B விசா வழக்கமான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு நிலையான சம்பளம் மற்றும் பல நலன்களை வழங்க வேண்டும். ஆனால், B-1 விசா பயன்படுத்தி, குறைந்த செலவில் ஊழியர்களை அமெரிக்காவில் பணியாற்ற வைத்தது சட்டபூர்வமாக இல்லாதது கண்டறியப்பட்டது. அமெரிக்க குடிவரவு மற்றும் குடியேற்ற அமைப்பான ICE (Immigration and Customs Enforcement) இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தியது. Infosys, அமெரிக்க சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள் உறுதியாகியதன் பின்னர், இவ்விபரீத முடிவு எடுக்கப்பட்டது.