பெஞ்சல் புயல் கரையை கடந்தபின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடைந்து நகர்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவை கடந்து, அரபிக்கடலுக்கு சென்ற பின்னரும் மீண்டும் காற்றழுத்த மண்டலமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.
புயல் பாதை வழியே இடங்களுக்கு மழை மற்றும் கனமழை அதிகம் இருக்கும் என்பதால், பொதுமக்கள் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலாவுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது.