Wednesday, February 5பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

எச். ராஜாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச். ராஜா மீது 2018 ஆம் ஆண்டு மார்சில் பெரியார் சிலை உடைப்பேன் என்ற கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவு செய்ததற்கும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள், கலவரம் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை ரத்து செய்ய கோரி எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்றம், வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இன்று (02.12.2024), சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் வழக்கில் தீர்ப்பளித்தார். இரு வழக்குகளிலும் எச். ராஜா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதோடு, ஒவ்வொரு வழக்கிற்கும் 6 மாத சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.