Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆர்எம்சி தெரிவித்துள்ளது.

டிச.5 முதல் 10 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரத்தில் மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸாகவும் இருக்கும்.