Wednesday, February 5பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

கலிபோர்னியா: சக்தி வாய்ந்த நிலநடுக்கம், மக்கள் பீதியில்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஃபெர்ண்டலே பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், வடக்கு கலிபோர்னியாவின் கடலோர பகுதிகளை உறுத்தி நிமிடங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது.

கடலோர பகுதிகளில் அதிர்ச்சி:
கேப் மெண்டொசினா பகுதிகளில் நிலநடுக்கம் மிகுந்த வலுவுடன் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டாலும், பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.

பாதிப்புகள் மற்றும் மக்கள் அவதி:
நிலநடுக்கத்தால் வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன, மற்றும் சில பகுதிகள் இருளில் மூழ்கின. 10,000க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக சிரமங்களை சந்தித்தனர். கடலோர பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதுடன், சிலர் உயரமான இடங்களில் சென்று சுனாமி வருமா என கண்காணித்தனர்.

மாநிலத்தின் நடவடிக்கைகள்:
சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம், மாநில அவசர சேவை குழுக்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உதவிகளை முன்னெடுத்து வருகின்றன.

சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகள்:
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.