மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பாகிஸ்தானில் இருந்து மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது . இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் மும்பையில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களின் போது 166 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தொலைபேசியில் மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் பாகிஸ்தானில் இருந்து விடுக்கபட்டிருக்கிறது . இதனால் தாஜ் ஹோட்டல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.